167 Views
இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் கொவிட்
தொற்றுக்கு எதிரான 5 இலட்சம் Oxford AstraZeneca தடுப்பூசியுடன் இந்திய விமானம் தற்போது இலங்கையை நோக்கி புறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்று காலை 11.00 மணிக்கு கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்திய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் எடுத்து வரப்படும் இந்த தடுப்பூசிகள் இலங்கை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ள இந்திய தூதுவரினால் இந்த தடுப்பூசி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.