கொவிட் 19 உயிரிழப்பு 152 ஆக உயர்வு, மொத்த தொற்று 32790

156 Views

கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மூவர் நேற்றைய தினம் மரணமடைந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.

மரணமடைந்தவர்களில் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும், மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவரும் என சுகாதார சேவைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 655 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் பேலியகொட கொத்தனியுடன் சம்பந்தபட்டவர்கள் 503 பேரும், சிறைச்சலை கொத்தணியுடன் தொடர்புடைய 147 பேரும், லன்டனிலிருந்து வருகை தந்த 4 பேரும், டுபாய் நாட்டிலிருந்து வருகை தந்த ஒருவரும் அடங்குகின்றனர்.

அதனடிப்படையில் இதுவரைக்கும் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 32790 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதணடிப்படையில் 8845 நோயாளர்கள் சிகிச்சை பெற்றும் 23790 நபர்கள் குணமடைந்துமுள்ளாதாக சுகாதார சேவைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் சுமார் 16 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் 4 பிரதேசங்கள் இன்றிலிருந்து தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் புதிதாக வெள்ளவத்தை பொலிஸ் பிரிவு மயுரா பிளேஸ் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *