ஜோ பைடனின் வெற்றி சீனாவுடனான உறவை பலப்படுத்தும் – சீன ஊடகம் நம்பிக்கை!

77 Views

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் (Joe Biden) வலுவான வெற்றியை பெற்றுதன் காரணமாக சீன-அமெரிக்க உறவு இன்னும் வலுவடைவதற்கு சாத்தியம் உள்ளதாக சீன அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

இருதரப்பு உறவில் நிலைத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்றும் அதனை வர்த்தக ரீதியாக ஆரம்பிக்க முடியும் என்று சீனாவின் குளோபள் ரைம்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளார்.

பெய்ஜிங் அரச தலைமை, ஜோ பைடனின் குழுவினருடன் கூடுமான வரையில் இசைந்து செயல்பட முயற்சிக்க வேண்டும் என்றும் அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் தன்னிச்சையாக சீன-அமெரிக்க உறவில் பாதிப்பை ஏற்படுத்தியதாக குளோபல் ரைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவினால் ஒடுக்கப்பட முடியாத அல்லது அதன் செயற்பாடுகளால் பாதிக்காத வலுவான நாடாகச் சீனா இருக்கவேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *