கொவிட் 19 – 24 வது மரணம் நிகழ்ந்துள்ளது.

154 Views

இலங்கையில் கொரேனாவால் மற்றுமொருவர் இறந்துள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரேனா வைரஸ் தொற்றினால் உயிரிந்தவர்கள் 24ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு-13ஐ சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரே அவ்வாறு மரணித்துள்ளார்.

நேற்றைய தினம் இரவு 11 வரைக்குமான கொரேனா தொற்றுக்குள்ளானவர்கள் 409 என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த தொற்றுக்குள்ளானவர்களில் 401 பேர் பேலியகொட கொத்தனியுடன் நெருங்கி பழகியோர் எனவும் 8 தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

அதனடிப்படையில் இதுவரைக்கும் மொத்தமாக 11744 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாகவும் அதில் 5581 குணமடைந்தும் 6140 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-niasfasmir-

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *