நடிகர் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை…

57 Views

கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் யோகிபாபு. அதனைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயன், அஜித்,விஜய், ரஜினி என தமிழின் பெரும்பாலான ஸ்டார்களுடன் நடித்து முன்னணி காமெடி நடிகரானார். ஆரம்பத்தில் 35 வயதாகும் யோகிபாபு திருமணம் செய்ய பெண் தேடிக்கொண்டிருந்தார்.

அவர் எப்போது திருமணம் செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்த வருடம் பெப்ரவரி 5 ஆம் திகதி வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணைதிருமணம் செய்தார். இத்தம்பதிகளின் வரவேற்பு மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது யோகிபாபு மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால்,திரைத்துறை நண்பர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *