யாழ் மக்கள் அவதானமாக இருங்கள்! எச்சரிக்கை

வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு எண்

கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றின் பரவல் ஆரம்பித்த காலம் முதல் தொடர்ச்சியாக இயங்கிவரும் வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பு எண்ணான 0212226666 தற்பொழுதும் தொடர்ந்து செயற்பாட்டில் உள்ளது.மீண்டும் கொரோனா தொற்று அபாயம் அதிகரித்துள்ள இங்காலப்பகுதியில் மக்கள் இவ் அவசர அழைப்பு எண் மூலம் கொரோனா தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளவும்

தங்களிடமிருந்து சுகாதார திணைக்களத்திற்கு தெரிவிக்க வேண்டியுள்ள அவசர விடயங்களை அறிவிப்பதற்கும் ( உதாரணமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் பயணம் செய்தவர்கள் மற்றும் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கவும்) இத் தொலைபேசி இலக்கத்தினை பாவிக்கவும்.

எமது பிரதேசத்தின் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பை கேட்டு நிற்கிறோம் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *